SIA -Adyar Batch

10 ஆயிரம் பேர் தேர்வு
2015–ம் ஆண்டு குரூப்–1 அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். 2014–ம் ஆண்டு 15 ஆயிரம் பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். *2015–ம் ஆண்டு பிப்ரவரி 2–வது வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகும். இந்த பணிக்கு 4 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26–ந்தேதி நடைபெறும். *குரூப்–2 நேர்முகத்தேர்வு உள்ள 904 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 3–வது வாரத்தில் வெளியாகும். முதல்நிலை எழுத்துத்தேர்வு மே மாதம் 10–ந் தேதியும், மெயின்தேர்வு செப்டம்பர் 26–ந் தேதியும் நடைபெறும். *குரூப் 3 நேர்முகத்தேர்வு கொண்ட 25 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் 17–ந்தேதி நடத்தப்படும். மருத்துவர்கள்
* உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க பிப்ரவரி 2–வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். இதற்கான தேர்வு மே மாதம் 31–ந் தேதி நடைபெறுகிறது. *சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, துணை சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்து மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4–வது வாரத்தில் வெளியாகிறது. தேர்வு ஜூன் மாதம் 14–ந்தேதி நடைபெறுகிறது. *புள்ளியியல் புலன்ஆய்வாளர்கள்(ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்கள்) காலிப்பணியிடங்கள் 268 உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4–வது வாரத்தில் வெளியாகும். தேர்வு ஜூன் 20–ந்தேதி நடைபெறும். குரூப்–1 தேர்வு
*47 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். முதல் நிலைத்தேர்வு ஜூலை 5–ந் தேதியும், மெயின்தேர்வு டிசம்பர் 5–ந் தேதி முதல் 7–ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. *564 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்–2 ஏ (நேர்முகத்தேர்வு இல்லாதது) தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் 2–வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்டு 16–ந்தேதி நடைபெறும். *வட்டார சுகாதார புள்ளியியல் நிபுணர்கள்(பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்ட்சியன்) காலிப்பணியிடங்கள் 36 உள்ளன. அந்த பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு ஏப்ரல் மாதம் 4–வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 12–ந்தேதி நடைபெறும். கிராம நிர்வாக அலுவலர்
*கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் இன்னும் வந்து சேரவில்லை. தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதம் 4–ந் தேதி நடைபெறுகிறது. *வன பயிற்சியாளர் (பாரஸ்ட் அப்ரண்டிஸ்) காலிப்பணியிடங்கள் 27 உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 31–ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3–வது வாரத்தில் வெளியாகும். * குரூப் –4 காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு நவம்பர் 15–ந் தேதி நடைபெறும். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.