♥ ♥ சிரிப்பிற்கு பஞ்சமில்ல நட்புக்குள் வஞ்சமில்லை ♥ ♥

சங்கத்தின் பெயர்:- சிரிப்பிற்கு பஞ்சமில்லை நட்புக்குள் வஞ்சமில்ல...ை
தலையங்கம்:- சிரிப்பு சங்கம்

நோக்கம்:- சிரிக்க, சிந்திக்க, தமிழில் உறவாட, வலைத் தளத்திலே தமிழின் பாவனையை அதிகரிக்க....

இச்சங்கம் 26-02-2012 அன்று துவங்கப்பட்டு முன்னனி சங்கமாக திகழ்கிறது!
இது ஒரு குடும்பமாக கருதப்படுகிறது.
எனவே எந்தவித பாகுபாடும், சச்சரவும் இல்லாத சங்கமாக நிலவ,
நிர்வாகம் சில கொள்கைகளோடு செயல்படுகின்றது...
கீழ்காணும் கொள்கைகளில் சில ஆரம்பக்காலம் முதலும், சில காலத்திற்கேற்றவாறு புதிதாகவும் இணைக்கப்பட்டு செயலாக்கப்பட்டு வருகிறது...

*1 சங்கத்துக்குள் அரசியல் மற்றும் அது சார்ந்த பதிவுகள் பதியக்கூடாது.

*2 சாதி, மத, இன வேறுபாடுகளின்றி நட்பை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி எல்லோரும் அன்புடன் பயணிக்க வேண்டும்.

*3 ஆபாசப்பதிவுகள் அல்லது ஆபாசத்தை மறைமுகமாக காட்டும் பதிவுகளும் நீக்கப்படும், அதை பதியும் அங்கத்தவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிரந்தரமாக நீக்கப்படுவர்.

*4 பெண்கள்/குழந்தைகள், மது/புகைத்தல் போன்ற படங்கள் நீக்கப்படும்.

*5 நடிகர்கள்/விளையாட்டு வீரர்கள் என எந்த விதமான நபர்களையும் ஒப்பிடும் பதிவுகளும், அவர்களை பிழையாக சித்தரிக்கும் படங்களும் நீக்கப்படும்.

*6 Youtube links தவிற மற்ற எந்தவித குறுஞ்சுட்டிகளும் அனுமதிக்கப்படமாட்டாது.

*7 மற்ற சங்கத்தின்(groups)/பக்கத்தின்(pages) பதிவுகளை பகிரவும்(share), அவற்றை இங்கு விளம்பரப்படுத்தவும் அனுமதியில்லை,
ஏனெனில் அந்த சங்க/பக்க Privacy settings காரணங்களால், அதை எல்லோரும் பார்க்க இயலாமல் போகிறது....

*8 தனிப்பட்ட பெண்கள் படமானாலும், சினிமா நடிகைகளானாலும், விருப்பங்கள்(likes) பெறும் நோக்கத்தில் மட்டுமே பதியும் பதிவுகள் நீக்கப்படும்.

*9 சங்கத்தின் பிறந்தநாள் பதிவைத் தவிற, அங்கத்தவர்களின் தனிப்பட்ட பிறந்தநாள் பதிவுகள் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினருக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கலாம்.

*10 Whats up number மற்றும் எந்த விதமான தொடர்பு எண்களும் பகிர அனுமதி இல்லை.

*11 எதற்கும் உதவாத அநாயச பதிவுகளும் அனுமதிக்கப்படமாட்டாது.

*12 சமுதாய விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் அறிவித்தல்கள் பதிவுகளுக்கு பதிவர்களே பொறுப்பு மேலும் அந்த மாதிரி பதிவுகள் உண்மைக்குப் புறம்பாக இருக்கும் பட்ஷத்தில் அந்தப் பதிவர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவர்.

மேலே கண்ட 12 கொள்கைகளையும் படித்துவிட்டு புதிய அங்கத்தவர்கள் சங்கத்தில் பதியவும்.

பின்குறிப்பு :
மேற்காணும் கொள்கைகளை நீக்கவோ/புதுபிக்கவோ அல்லது மேலும் கொள்கைகளை சேர்க்கவோ சங்க நிர்வாகத்திற்கு மட்டுமே உரிமை உண்டு.
இந்த கொள்கைகள் சங்க நிர்வாகத்தால் ஒருமனதாக புதுப்பிக்கப்பட்டதாகும்!

இங்ஙனம்,
சங்கத்தலைவர் திரு.பைலட் பிரேம்நாத் மற்றும் சக நிர்வாகிகள்,
சுவாதி மகேசன்
சிவா பிரம்மா.

https://www.facebook.com/photo.php?fbid=325433127618543&set=gm.744633785591521&type=1